தேசிய விருது பெற்ற நடிகையுடன் இணையும் அருண் விஜய்!

தேசிய விருது பெற்ற நடிகையுடன் இணையும் அருண் விஜய்!

தேசிய விருது பெற்ற நடிகையுடன் இணையும் அருண் விஜய்!

செக்கச்சிவந்த வானம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அருண் விஜய் தமிழ் மற்றும் தெலுகு ஆகிய மொழிகளில் தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அருண் விஜய்யின் அடுத்த படமான ‘பாக்ஸர்’ படத்தை அறிமுக இயக்குநர் விவேக் இயக்குகிறார். இவர் இயக்குநர் பாலாவிடம் உதவியாளராக இருந்தவர். லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைக்க மதியழகன் தயாரிக்கிறார்.

இப்படத்தில், அருண் விஜய்க்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நடிகையான ரித்திகா சிங் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் இறுதி சுற்று படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். சிவலிங்கா படத்திற்கு பிறகு தமிழில் நடிக்கிறார் ரித்திகா.

Leave a Comment