ஆர்யாவிற்கு கல்யாணம்!

ஆர்யாவிற்கு கல்யாணம்!

ஆர்யாவிற்கு கல்யாணம்!

2005ம் ஆண்டு வெளியான ‘அறிந்தும் அறியாமலும்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் ஆர்யா. ஆனால், 2003ம் ஆண்டே ஜீவா இயக்கத்தில் ‘உள்ளம் கேட்குமே‘ படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் படம் தள்ளிப்போனதால், “அறிந்தும் அறியாமலும்” ஆர்யாவுக்கு அறிமுக படமானது.

2017ம் ஆண்டு வெளியான ‘வனமகன்’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான சாயிஷாவிற்கும் ஆர்யாவுக்கும் இடையே கிசுகிசுக்கப்பட்டது. அதை காதலர் தினமான இன்று தனது திருமண அறிவிப்பை வெளியிட்டு உறுதி செய்துள்ளார் ஆர்யா. இது காதல் திருமணம் அல்ல இரு குடும்பமும் சேர்ந்து எடுத்த முடிவு' என்று சாயிஷா அம்மா தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதம் இவர்களுடைய திருமணம் நடைபெறவுள்ளது. ராணா, திரிஷா உள்பட பல திரை பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Leave a Comment